Tuesday, June 30, 2009

பொய்

நூறு நாட்கள் நண்பனாய் இருந்து

ஐந்தாயிரம் நாட்கள் "யார் நீ" என்றிருந்தாலும்

வேதனை பிரிவினால் அதிகமல்ல,

பிரிவிற்கு பொருந்தா உண் மெய்அற்ற காரணமே !

----

மூழ்கிய நட்பு

அன்பும் அரவணைப்பும் இசையும்
அள்ளிதந்த என் நண்பர்
மார்கழி பணியில் மறைந்துபோனாரோ, இல்லை
நட்பின் முகவரியை கடல் மணலில் எழுதி ரசித்தாரோ ?