Wednesday, November 28, 2012

மறைந்து போன மேகத்துக்கு என் மரியாதை

என் வாழ்கையில்  நீ வான வில்லாய்  இருந்தாய்,
என்றோ ஒரு நாள் வந்தாய் , வந்த கணமே புன்னகை பூக்க செய்தாய்.
இன்றோ நீ வானோடு கலந்து மழையாய் பொழிகறாயா?

மறைந்து போன நீயும்
மறைந்து போகின்ற மேகங்களும்
மீண்டும் மண்ணை  சேருமோ? மண் வாசம் தான் வீசுமோ ?

என் பிறந்து நாள் வாழ்த்து மடல்களில் சிறந்த மடல் ஒன்று இவ்வருடம் குறையுமே.

உன் நினைவுகள் என்றென்றும் நிலைக்கும்.

 

Wednesday, February 10, 2010

தண்ணீரில் கலையா கவிதை

கனவொன்று நிஜமொன்று
நிலவில் ஏன் கரையின்று
மழை மேகங்கள் சூழும் முன்
காற்றை போல் வருவாயா

வானின் நீலம்
நிறம் மாறவே
கனவின் கோலங்கள் கரைந்தனவே
தரை தீண்டும் முன்னமே
நிஜத்திலும் உள்ள வாசம் உணர்ந்தேன்
மண்வாசம் கண்டேன்

Tuesday, June 30, 2009

பொய்

நூறு நாட்கள் நண்பனாய் இருந்து

ஐந்தாயிரம் நாட்கள் "யார் நீ" என்றிருந்தாலும்

வேதனை பிரிவினால் அதிகமல்ல,

பிரிவிற்கு பொருந்தா உண் மெய்அற்ற காரணமே !

----

மூழ்கிய நட்பு

அன்பும் அரவணைப்பும் இசையும்
அள்ளிதந்த என் நண்பர்
மார்கழி பணியில் மறைந்துபோனாரோ, இல்லை
நட்பின் முகவரியை கடல் மணலில் எழுதி ரசித்தாரோ ?

Friday, October 10, 2008

" இரவு நேரத்தில் புன்னகை திங்கள் "

நிலவை மட்டும் ரசித்த எனக்கு
திங்களை கான்பிதாயே!
ஒளியை தந்த ஒலியே..
உன் மேல் காதலடி,
ஒலித்து வைக்க இயலாமல்
என் எழுத்துகளால் ஒளிபரப்பிவிட்டேன் ..


Saturday, February 2, 2008

அன்பான தோழிக்கு என் இனிய வாழ்த்துக்கள்

நன்றி சொனேன் நம் ரயிலுக்கு,
எத்தனை மாற்றங்கள்,ஏமாற்றங்கள் கண்டோம்
ஆனால் நமக்குள் இவை என்றும் இருந்ததில்லை..

நம் காலை ரயில் செய்த பாவம்
உன்னை அரை தூக்கத்தில் எழுப்புவது ஒன்றே :)
.. செய்த புண்ணியம்..
நம் நட்பு! இந்நாள்!

தேநீர் குடிக்க நாம் சில்லறை எண்ணிய காலத்திலிருந்து
நமது சில்லறையை VLR என்னியதிலிருந்து
அனைத்துமே நம் நட்பென்னும் பசியை பெருக வைத்தது..

படிப்பொ,பாட்டோ,படமோ,பக்தியோ- எதிலுமே நம்மை வீழ்த்த ஆலில்லை..

உன் அழகான புரியா கவிதைகள்,
என் கத்துகுட்டி கவிதைகள்,
உன் அழகான விரல்கள்,
உன் கண்ணாடி,பிள்ளையார் பொலம்பல்,
திடீர் கோபம்,கண்ணீர்,பள்ளத்தூர் தமிழ்..
என் கண்ணீரை ஏந்தும் உன் கைகள்,
இன்னும் எத்தனையோ....

அனைத்தையும் ரசிக்க, உன்னை அணைக்க,
கதிர் மதியம் போல் அரவணைக்க,..
இறைவனை போற்றி பாடுகிறேன்..

-அபர்னா

(For my best friend's wedding)

உணர்வு

நீ என்னோடு இருக்கும் வரை உணரவில்லை
இந்த நிலையற்ற நிலையை!